மதராஸ் கிறித்தவக் கல்லூரி சமூக நலத்துறை (Social Work) மாணவர்களை, தென்சென்னை மாவட்ட தலைவர் P.முஹம்மது ஹுசைன் அவர்கள் 25-மார்ச்-2011 அன்று கல்லூரி வகுப்பில் சென்று, சந்தித்து உரையாடினார். சமூக சேவையில் - அரசியலில் மாற்றம் காண விழையும் SDPI யின் வழிமுறைகள், மக்களுக்கு செய்துள்ள சேவைகள், கட்சியின் கொள்கை குறித்த கௌரவ ஆலோசனை நடைபெற்றது.
கட்சியின் செயல்பாடுகள் குறித்த மாணவர்களின் கேள்விகளுக்கு தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் P.முஹம்மது ஜுனைத் பதிலளித்தார். அரசியல் என்பது பொதுவாக மக்கள் கொண்டுள்ள எண்ணத்தைப் போன்று ஒரு தவறான வழிமுறையல்ல, மாறாக அரசியல் சரியாக பயன்படுத்தப்படின், அது ஒரு சமூக சேவையாகும் என்று எடுத்தியம்பினார்.
குறைந்த காலத்தில், ஒட்டுமொத்த இந்தியர்களின் ஆதரவைப்பெற்று SDPI சிறந்த அரசியல் கட்சியாக பரிணமித்து வருவது, மக்கள் ஒரு அரசியல் மறுமலர்ச்சியை ஆரத்தழுவ காத்துக்கொண்டிருப்பதை காட்டுகிறது. அந்த அரசியல் மறுமலர்ச்சியை முன்னெடுத்துச்செல்ல SDPI காத்துக்கொண்டிருக்கிறது என்றும் கூறினார்.
No comments:
Post a Comment