தமிழக சட்டமன்ற தேர்தல் 2011 - சென்னை துறைமுகம் தொகுதி வேட்பாளர் அறிமுகம் மற்றும் தேர்தல் பிரச்சார துவக்கக் கூட்டம் 22-மார்ச்-2011 அன்று ராயபுரம், ஃப்ரூக் மஹாலில் நடைபெற்றது. மாலை 7 மணிக்கு துவங்கிய கூட்டத்தை SDPI யின் மாநில தலைவர் KKSM. தெஹ்லான் பாகவி அவர்கள் துவங்கி வைத்தார். வடசென்னை மாவட்ட பொதுச்செயலாளர் ரஷீத் அவர்கள் முகவுரையாற்றினார். காஞ்சிபுரம் மாவட்ட பொதுச்செயளாலர் 'விடியல்' சம்சுதீன், திருவள்ளூர் மாவட்ட பொதுச்செயளாலர் அசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் புஹாரி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, முறையே தென்சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தலைவர்கள் P.முஹம்மது ஹுசைன், முஹம்மது பிலால், ஜாகிர் ஹுசைன், மேலும் சென்னை துறைமுகம் தொகுதி வேட்பாளரும், வடசென்னை மாவட்ட தலைவருமான அமீர் அவர்களும் சிறப்புரையாற்றினர்.
தென்சென்னை மாவட்ட தலைவர் P.முஹம்மது ஹுசைன் அவர்கள் உறையாற்றிய பொழுது, தமிழக மக்களின் வாழ்வினை சீர்குழைத்த, முன்னேறவிடாமல் தடுத்த திராவிட கட்சிகள் தமிழக மக்களுக்காக ஒருபோதும் உழைத்ததில்லை இனிமேலும் உழைக்கப்போவதுமில்லை. உண்மையாக உழைக்கக்கூடியது SDPI மட்டுமே என்றார்.
திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஜாகிர் ஹுசைன் அவர்கள் உறையாற்றிய பொழுது, இது ஒரு சவாலான தேர்தல் எனவும், இத்தேர்தலில் நாம் நம்முடைய அனைத்து தியாகங்களையும் செய்து உண்மையாக உழைப்போமெனில் நாம் சாதிக்கப்போவது உறுதி. அதற்கு இறைவன் துணை நிற்ப்பான் என்று கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் முஹம்மது பிலால் அவர்கள் பேசியபொழுது, துயர்நீங்காத தமிழக மக்களை துயரிலிருந்து மீட்கவே SDPI பாடுபடும் எனக் கூறினார். மேலும் கேரளாவில் 98 இடங்களிலும், தமிழகத்தில் 6 இடங்களிலும், மேற்கு வங்கத்தில் 8 இடங்களிலும், அஸ்ஸாமில் SDPI யின் ஆதரவு பெற்ற AUDF (அஸ்ஸாம் யுனைடெட் டெமாக்ரடிக் ஃபிரண்ட்) 48 இடங்களிலும் களமிறங்குவது இந்திய அரசியலில் ஒரு மாபெரும் மைல்கல் என்று குறிப்பிட்டார்.
பின்னர் பேசிய SDPI யின் மாநில தலைவர் KKSM. தெஹ்லான் பாகவி அவர்கள், இன்று இந்தியர்கள் - குறிப்பாக வஞ்சிக்கப்பட்ட மக்கள் எதிர்நோக்கக்கூடிய, நம்பிக்கைகுகந்த கட்சியாக SDPI திகழ்கிறது, மேலும் சென்னை துறைமுக தொகுதியை தேர்ந்தெடுத்தது, அடுத்து வரும் காலங்களில் சட்டமன்றத்தை அடையவே என்றும் உரைத்தார். மேலும் பேசுகையில், மக்களின் பரிதாப நிலையையும், அரசியல் சமுதாயத்தினருடைய பார்வையில் புரிந்துகொள்ளப்படுதலும் மிகவும் கவலையளிப்பதாகக் கூறினார்.
பின்னர் துறைமுக தொகுதி வேட்பாளரான அமீர் அவர்களை அனைத்து தொண்டர்களுக்கு மத்தியில் அறிமுகம் செய்து வைத்து, வெற்றி வேட்பாளரான அமீர் அவர்களை, வெற்றிபெறச்செய்வதில் அனைவரும் முழுமூச்சுடன் செயல்படவேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இறுதியாக தேர்தலில் வெற்றியும் நமதே! வருங்காலத்தில் சட்டசபையும் நமதே!! என்று தனது நன்றியுரையை R.K.நகர் தொகுதிச்செயலாளர், சகோதரர் திரு.இரத்தினம் அவர்கள் ஆற்றி, வந்திருந்த அனைத்து தொண்டர்களுக்கும் தேர்தல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

No comments:
Post a Comment