வரும் தமிழக சட்டமன்ற தேர்தலை தனியாக எதிர்கொள்ள, மாபெரும் தேசிய அரசியல் கட்சியான SDPI முடிவெடுத்து, தான் போட்டியிடப் போவதாகஅறிவித்துள்ள 10 தொகுதிகளில் முதல்கட்டமாக ஆறு தொகுதிகளை SDPI அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட்ட 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது.
முஸ்லிம்களுக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு, வக்புவாரிய சொத்துக்களை முறைப்படுத்துவது, உலமா நலவாரியத்திற்கு அதிக நிதிகளை ஒதுக்குவது போன்ற கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட கட்சிகள் சரியான முறையில் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால், எஸ்.டி.பி.ஐ.-ன் மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி எஸ்.டி.பி.ஐ. 10 தொகுதிகளில் தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ளது.
மேலும் சோசியல் டெமாக்ரடிக் கட்சியை பொறுத்தவரைக்கும் வெற்றி தோல்வியை குறித்து கவலைப்படாமல் இந்நாட்டினுடைய நலன், ஒடுக்கப்பட்ட சமுதாயமான முஸ்லிம் சமுதாயத்தின் முன்னேற்றம், முஸ்லிம் சமுதாயத்தின் அதிகார பிரதிநிதித்துவம், ஒடுக்கப்பட்ட சமுதாயமான தலித்துக்கள் மற்றும் பழங்குடியினர் இவர்களுடைய அரசியல் அதிகாரத்தின் நலனை கவனத்தில் கொண்டு போராட்ட அரசியலை மேற்கொள்ளக்கூடிய அரசியல் கட்சியாக விளங்கும்.
வெளியிடப்பட்ட முதல் கட்ட 6 தொகுதிகளின் பட்டியல் விவரம் பின்வருமாறு:
1.கடையநல்லூர் (நெல்லை மாவட்டம்)
2இராமநாதபுரம்
3.பூம்புகார் (நாகை மாவட்டம்)
4.தொண்டமுத்தூர் (கோவை மாவட்டம்)
5.துறைமுகம் (சென்னை) ஆகிய ஐந்து தொகுதிகளும்
6.புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டினம் ஆகிய தொகுதியும் முதல்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள தொகுதிகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வருடம் நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் முன்னெப்பொழுதும் போலல்லாமல், கொள்கைகளின் மத்தியில் நிகழும் போராட்டமாக இருக்கும் என்பது உண்மை. தமிழக மக்களின் துயர்துடைக்க மறந்த, மறுத்த, திராவிட கட்சிகள்(?) என்று தம்பட்டமடித்துக்கொள்ளும் கட்சிகளுக்கு தமிழக மக்கள் சிறந்த பாடத்தை புகட்டுவார்கள் என்பது திண்ணம். கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்கும் SDPI கட்சியும், பிற திராவிட, சமுதாய கட்சிகளுக்கு இத்தேர்தலில் சிம்மசொப்பணமாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
தடைகள் பலவரினும், அனைத்து சவால்களையும் முறியடித்து SDPI மிகச்சிறந்த அரசியல் மற்றும் சமுதாய மறுமலர்ச்சியை த்மிழகத்தில் ஏற்ப்படுத்தும் என்பது உறுதி.
No comments:
Post a Comment