ஆனால் சூழ்நிலை என்னவாக இருந்தபோதிலும் SDPI, இந்திய மக்களுக்கு ஒரு பிரச்சினையென்றால் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என்பது திண்ணம். அரசியல் இலாப நோக்கங்களில்லாமல், மக்களின் நலனே தலையாயது என்ற அடிப்படையில் அப்பாவி தமிழக மீனவர்களைக் கொன்ற இலங்கை கடற்படையைக் கண்டித்து சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் முன்பு 25.01.2011 அன்று SDPI மாபெரும் முற்றுகை போராட்டத்தை நடத்தியது. போராட்டத்திற்க்கு SDPI யின் தமிழக தலைவர் K.K.S.M. தெஹ்லான் பாகவி தலைமை தாங்கி கண்டன உரை நிகழ்த்தினார். காஞ்சிபுரம் மாவட்ட SDPI தலைவர் பிலால் அவர்களும், வடசென்னை மாவட்ட SDPI தலைவர் அமீர் ஹம்சா அவர்களும் போராட்டத்திற்கு முன்னிலை வகித்தனர். போராட்டத்தின் சிறப்புரையை தென்சென்னை மாவட்ட SDPI தலைவர் P. முஹம்மது ஹுசைன் நிகழ்த்தினார்.
முற்றுகை போராட்டத்தின் பங்காளர்களாக பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். பல்வேறு பத்திரிக்கைகளிலிருந்தும் பத்திரிக்கையாளர்கள் வந்து கலந்துகொண்டனர். முற்றுகைப்போராட்டத்தின் முடிவில் போராட்டத்தில் பங்குபெற்ற அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
மற்றெந்த ஜனநாயகப் போராட்டத்தையும் போல இப்போராட்டத்தையும் பத்திரிக்கைகள் வெளியிட மறுத்தது. இதுதான் பத்திரிக்கைகள் கடைபிடிக்கும் ஜனநாயகமோ?
No comments:
Post a Comment