வருகிற 14வது தமிழக சட்டமன்ற தேர்தலில், தென்சென்னை மாவட்ட தலைவர் P.முஹம்மது ஹுசைன் அவர்கள் சென்னை துறைமுகம் தொகுதியின் SDPI வேட்பாளராக களம் காணுகிறார். முன்னர் SDPI யின் வேட்பாளர்ராக அறிவிக்கப்பட்ட வடசென்னை தலைவர் S.அமீர் ஹம்ஜாவின் வேட்புமனு சில காரணங்களை மேற்கோள் காட்டி தேர்தல் அதிகாரியினால் நிராகரிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த தென்சென்னை மாவட்ட தலைவர் P.முஹம்மது ஹுசைன் அவர்கள் சென்னை துறைமுகம் தொகுதியில் வேட்பாளராக களமிறங்குகிறார்.
SDPI South Chennai President's message to all the Indians
The Social Democratic Party of India (SDPI) is a neo-political movement aiming at the renaissance of Indian politics to empower people of all social strata within the country. Let we all Indian citizens join hands in a common political platform to promote equality, freedom, justice and a harmonised living.
SDPI has come out with the slogan - "Freedom from hunger! Freedom from Fear"
I welcome all Indians - especially the Chennaites in promoting a harmonised polity to work for the welfare and development of India and the citizens. Our vision of "India - a Superpower in 2020" should be achieved with the advancement and empowerement of all Indians regardless of any caste, creed or religion.
- P. Mohamed Hussain
President, South Chennai District,
SDPI.
Tuesday, March 29, 2011
தென்சென்னை மாவட்ட தலைவர் சென்னை துறைமுகம் தொகுதியில் வேட்பாளராக களமிறங்குகிறார்
Friday, March 25, 2011
MCC சமூக சேவைத்துறை மாணவர்கள் - SDPI தென்சென்னை மாவட்ட தலைவர் சந்திப்பு
மதராஸ் கிறித்தவக் கல்லூரி சமூக நலத்துறை (Social Work) மாணவர்களை, தென்சென்னை மாவட்ட தலைவர் P.முஹம்மது ஹுசைன் அவர்கள் 25-மார்ச்-2011 அன்று கல்லூரி வகுப்பில் சென்று, சந்தித்து உரையாடினார். சமூக சேவையில் - அரசியலில் மாற்றம் காண விழையும் SDPI யின் வழிமுறைகள், மக்களுக்கு செய்துள்ள சேவைகள், கட்சியின் கொள்கை குறித்த கௌரவ ஆலோசனை நடைபெற்றது.
கட்சியின் செயல்பாடுகள் குறித்த மாணவர்களின் கேள்விகளுக்கு தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் P.முஹம்மது ஜுனைத் பதிலளித்தார். அரசியல் என்பது பொதுவாக மக்கள் கொண்டுள்ள எண்ணத்தைப் போன்று ஒரு தவறான வழிமுறையல்ல, மாறாக அரசியல் சரியாக பயன்படுத்தப்படின், அது ஒரு சமூக சேவையாகும் என்று எடுத்தியம்பினார்.
குறைந்த காலத்தில், ஒட்டுமொத்த இந்தியர்களின் ஆதரவைப்பெற்று SDPI சிறந்த அரசியல் கட்சியாக பரிணமித்து வருவது, மக்கள் ஒரு அரசியல் மறுமலர்ச்சியை ஆரத்தழுவ காத்துக்கொண்டிருப்பதை காட்டுகிறது. அந்த அரசியல் மறுமலர்ச்சியை முன்னெடுத்துச்செல்ல SDPI காத்துக்கொண்டிருக்கிறது என்றும் கூறினார்.
SDPI முஸ்லிம்களின் கட்சியா? ஒரு விளக்கம்
SDPI என்ற சோஷியல் டெமோக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா முஸ்லிம்களுக்கு மட்டுமான கட்சியல்ல. முஸ்லிம்கள், தலித்துகள், கிறிஸ்தவர்கள், பழங்குடியினர் போன்ற பிற்படுத்தப்பட்ட, நீதி மறுக்கப்படும் அனைத்து சமுதாயத்தவர்களுக்குமான தேசிய அளவிலான கட்சி. இந்தியாவில் 16 மாநிலங்களில் இது தன் கிளைகளைப் பரப்பி துடிப்புடன் செயல்பட்டு வருகின்றது.
இராஜஸ்தான், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் SDPI கணிசமான வெற்றிகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் SDPI இப்பொழுதுதான் காலூன்றி வருகின்றது. மாவட்டப் பொறுப்புகளில் நிறைய முஸ்லிமல்லாதார் இருக்கின்றனர். வேட்பாளர்களாக அறிவிக்கக்கூடிய அளவுக்கு யாரும் இன்னும் வளரவில்லை.
ஆனால் கேரளாவில் மாநிலப் பொதுச்செயலாளர், மாநிலத் துணைத் தலைவர் முதற்கொண்டு பல பொறுப்புகளில் முஸ்லிமல்லாதார் இருக்கின்றனர். கேரளாவில் SDPI 98 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகின்றது. இதில் சில தொகுதிகளில் முஸ்லிமல்லாதார் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
எக்காலத்திலும் முஸ்லிம் வாக்கு வங்கியைப் பிளவுபடுத்துவது SDPIன் நோச்கமல்ல. மாறாக, முஸ்லிம்கள், தலித்துகள், கிறிஸ்தவர்கள், பழங்குடியினர் போன்ற பிற்படுத்தப்பட்ட, நீதி மறுக்கப்பட்ட சமுதாயங்களை ஒருங்கிணைத்து, சக்திப்படுத்துவதே SDPIன் நோக்கம்.
இதுநாள் வரை முஸ்லிம்கள் செய்து வந்த எதிர்மறையான அரசியலை (Negative Politics) தவிர்த்து, உடன்பாடான அரசியலை (Positive Politics) SDPI கையில் எடுத்துள்ளது. அத்தோடு SDPIன் அரசியல் வழிமுறை போராட்ட அரசியல் (Agitative Politics) வழிமுறையாகும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கிடைக்கவேண்டிய நீதி, சமஉரிமை, இடஒதுக்கீடு என்று அனைத்துத் தேவைகளும் போராடாமல் கிடைக்காது. எனவே SDPI அந்த வழிமுறையைக் கையில் எடுத்துள்ளது.
Labels:
SDPI
Monday, March 21, 2011
சென்னை துறைமுகம் தொகுதி வேட்பாளர் அறிமுகம் மற்றும் தேர்தல் பிரச்சார துவக்கக் கூட்டம்
தமிழக சட்டமன்ற தேர்தல் 2011 - சென்னை துறைமுகம் தொகுதி வேட்பாளர் அறிமுகம் மற்றும் தேர்தல் பிரச்சார துவக்கக் கூட்டம் 22-மார்ச்-2011 அன்று ராயபுரம், ஃப்ரூக் மஹாலில் நடைபெற்றது. மாலை 7 மணிக்கு துவங்கிய கூட்டத்தை SDPI யின் மாநில தலைவர் KKSM. தெஹ்லான் பாகவி அவர்கள் துவங்கி வைத்தார். வடசென்னை மாவட்ட பொதுச்செயலாளர் ரஷீத் அவர்கள் முகவுரையாற்றினார். காஞ்சிபுரம் மாவட்ட பொதுச்செயளாலர் 'விடியல்' சம்சுதீன், திருவள்ளூர் மாவட்ட பொதுச்செயளாலர் அசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் புஹாரி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, முறையே தென்சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தலைவர்கள் P.முஹம்மது ஹுசைன், முஹம்மது பிலால், ஜாகிர் ஹுசைன், மேலும் சென்னை துறைமுகம் தொகுதி வேட்பாளரும், வடசென்னை மாவட்ட தலைவருமான அமீர் அவர்களும் சிறப்புரையாற்றினர்.
தென்சென்னை மாவட்ட தலைவர் P.முஹம்மது ஹுசைன் அவர்கள் உறையாற்றிய பொழுது, தமிழக மக்களின் வாழ்வினை சீர்குழைத்த, முன்னேறவிடாமல் தடுத்த திராவிட கட்சிகள் தமிழக மக்களுக்காக ஒருபோதும் உழைத்ததில்லை இனிமேலும் உழைக்கப்போவதுமில்லை. உண்மையாக உழைக்கக்கூடியது SDPI மட்டுமே என்றார்.
திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஜாகிர் ஹுசைன் அவர்கள் உறையாற்றிய பொழுது, இது ஒரு சவாலான தேர்தல் எனவும், இத்தேர்தலில் நாம் நம்முடைய அனைத்து தியாகங்களையும் செய்து உண்மையாக உழைப்போமெனில் நாம் சாதிக்கப்போவது உறுதி. அதற்கு இறைவன் துணை நிற்ப்பான் என்று கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் முஹம்மது பிலால் அவர்கள் பேசியபொழுது, துயர்நீங்காத தமிழக மக்களை துயரிலிருந்து மீட்கவே SDPI பாடுபடும் எனக் கூறினார். மேலும் கேரளாவில் 98 இடங்களிலும், தமிழகத்தில் 6 இடங்களிலும், மேற்கு வங்கத்தில் 8 இடங்களிலும், அஸ்ஸாமில் SDPI யின் ஆதரவு பெற்ற AUDF (அஸ்ஸாம் யுனைடெட் டெமாக்ரடிக் ஃபிரண்ட்) 48 இடங்களிலும் களமிறங்குவது இந்திய அரசியலில் ஒரு மாபெரும் மைல்கல் என்று குறிப்பிட்டார்.
பின்னர் பேசிய SDPI யின் மாநில தலைவர் KKSM. தெஹ்லான் பாகவி அவர்கள், இன்று இந்தியர்கள் - குறிப்பாக வஞ்சிக்கப்பட்ட மக்கள் எதிர்நோக்கக்கூடிய, நம்பிக்கைகுகந்த கட்சியாக SDPI திகழ்கிறது, மேலும் சென்னை துறைமுக தொகுதியை தேர்ந்தெடுத்தது, அடுத்து வரும் காலங்களில் சட்டமன்றத்தை அடையவே என்றும் உரைத்தார். மேலும் பேசுகையில், மக்களின் பரிதாப நிலையையும், அரசியல் சமுதாயத்தினருடைய பார்வையில் புரிந்துகொள்ளப்படுதலும் மிகவும் கவலையளிப்பதாகக் கூறினார்.
பின்னர் துறைமுக தொகுதி வேட்பாளரான அமீர் அவர்களை அனைத்து தொண்டர்களுக்கு மத்தியில் அறிமுகம் செய்து வைத்து, வெற்றி வேட்பாளரான அமீர் அவர்களை, வெற்றிபெறச்செய்வதில் அனைவரும் முழுமூச்சுடன் செயல்படவேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இறுதியாக தேர்தலில் வெற்றியும் நமதே! வருங்காலத்தில் சட்டசபையும் நமதே!! என்று தனது நன்றியுரையை R.K.நகர் தொகுதிச்செயலாளர், சகோதரர் திரு.இரத்தினம் அவர்கள் ஆற்றி, வந்திருந்த அனைத்து தொண்டர்களுக்கும் தேர்தல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

சென்னை துறைமுகம் தொகுதி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
சென்னை துறைமுகம் தொகுதி வேட்பாளர் S.அமீர் 19-மார்ச்-2011 அன்று வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் மாநில தலைவர் KKSM. தெஹ்லான் பாகவி அவர்களும், முறையே தென்சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தலைவர்கள் P.முஹம்மது ஹுசைன், முஹம்மது பிலால், ஜாகிர் ஹுசைன் ஆகியோர் உடனிருந்தனர். வேட்புமனு தாக்கலின் பொது SDPI யின் தொண்டர்கள் பெருமளவு கலந்துகொண்டு வேட்பாளருக்கு உற்சாகமளித்தனர்.
Sunday, March 13, 2011
தமிழக சட்டமன்ற தேர்தல் 2011: தனித்து களம் காணுகிறது SDPI
வரும் தமிழக சட்டமன்ற தேர்தலை தனியாக எதிர்கொள்ள, மாபெரும் தேசிய அரசியல் கட்சியான SDPI முடிவெடுத்து, தான் போட்டியிடப் போவதாகஅறிவித்துள்ள 10 தொகுதிகளில் முதல்கட்டமாக ஆறு தொகுதிகளை SDPI அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட்ட 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது.
முஸ்லிம்களுக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு, வக்புவாரிய சொத்துக்களை முறைப்படுத்துவது, உலமா நலவாரியத்திற்கு அதிக நிதிகளை ஒதுக்குவது போன்ற கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட கட்சிகள் சரியான முறையில் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால், எஸ்.டி.பி.ஐ.-ன் மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி எஸ்.டி.பி.ஐ. 10 தொகுதிகளில் தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ளது.
மேலும் சோசியல் டெமாக்ரடிக் கட்சியை பொறுத்தவரைக்கும் வெற்றி தோல்வியை குறித்து கவலைப்படாமல் இந்நாட்டினுடைய நலன், ஒடுக்கப்பட்ட சமுதாயமான முஸ்லிம் சமுதாயத்தின் முன்னேற்றம், முஸ்லிம் சமுதாயத்தின் அதிகார பிரதிநிதித்துவம், ஒடுக்கப்பட்ட சமுதாயமான தலித்துக்கள் மற்றும் பழங்குடியினர் இவர்களுடைய அரசியல் அதிகாரத்தின் நலனை கவனத்தில் கொண்டு போராட்ட அரசியலை மேற்கொள்ளக்கூடிய அரசியல் கட்சியாக விளங்கும்.
வெளியிடப்பட்ட முதல் கட்ட 6 தொகுதிகளின் பட்டியல் விவரம் பின்வருமாறு:
1.கடையநல்லூர் (நெல்லை மாவட்டம்)
2இராமநாதபுரம்
3.பூம்புகார் (நாகை மாவட்டம்)
4.தொண்டமுத்தூர் (கோவை மாவட்டம்)
5.துறைமுகம் (சென்னை) ஆகிய ஐந்து தொகுதிகளும்
6.புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டினம் ஆகிய தொகுதியும் முதல்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள தொகுதிகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வருடம் நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் முன்னெப்பொழுதும் போலல்லாமல், கொள்கைகளின் மத்தியில் நிகழும் போராட்டமாக இருக்கும் என்பது உண்மை. தமிழக மக்களின் துயர்துடைக்க மறந்த, மறுத்த, திராவிட கட்சிகள்(?) என்று தம்பட்டமடித்துக்கொள்ளும் கட்சிகளுக்கு தமிழக மக்கள் சிறந்த பாடத்தை புகட்டுவார்கள் என்பது திண்ணம். கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்கும் SDPI கட்சியும், பிற திராவிட, சமுதாய கட்சிகளுக்கு இத்தேர்தலில் சிம்மசொப்பணமாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
தடைகள் பலவரினும், அனைத்து சவால்களையும் முறியடித்து SDPI மிகச்சிறந்த அரசியல் மற்றும் சமுதாய மறுமலர்ச்சியை த்மிழகத்தில் ஏற்ப்படுத்தும் என்பது உறுதி.
Labels:
SDPI,
தமிழக சட்டமன்ற தேர்தல் 2011
தமிழக மீனவர்களை கொன்ற இலங்கை கடற்படையை கண்டித்து சென்னையிலுள்ள இலங்கை தூதரக முற்றுகை போராட்டம்
ஆனால் சூழ்நிலை என்னவாக இருந்தபோதிலும் SDPI, இந்திய மக்களுக்கு ஒரு பிரச்சினையென்றால் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என்பது திண்ணம். அரசியல் இலாப நோக்கங்களில்லாமல், மக்களின் நலனே தலையாயது என்ற அடிப்படையில் அப்பாவி தமிழக மீனவர்களைக் கொன்ற இலங்கை கடற்படையைக் கண்டித்து சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் முன்பு 25.01.2011 அன்று SDPI மாபெரும் முற்றுகை போராட்டத்தை நடத்தியது. போராட்டத்திற்க்கு SDPI யின் தமிழக தலைவர் K.K.S.M. தெஹ்லான் பாகவி தலைமை தாங்கி கண்டன உரை நிகழ்த்தினார். காஞ்சிபுரம் மாவட்ட SDPI தலைவர் பிலால் அவர்களும், வடசென்னை மாவட்ட SDPI தலைவர் அமீர் ஹம்சா அவர்களும் போராட்டத்திற்கு முன்னிலை வகித்தனர். போராட்டத்தின் சிறப்புரையை தென்சென்னை மாவட்ட SDPI தலைவர் P. முஹம்மது ஹுசைன் நிகழ்த்தினார்.
முற்றுகை போராட்டத்தின் பங்காளர்களாக பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். பல்வேறு பத்திரிக்கைகளிலிருந்தும் பத்திரிக்கையாளர்கள் வந்து கலந்துகொண்டனர். முற்றுகைப்போராட்டத்தின் முடிவில் போராட்டத்தில் பங்குபெற்ற அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
மற்றெந்த ஜனநாயகப் போராட்டத்தையும் போல இப்போராட்டத்தையும் பத்திரிக்கைகள் வெளியிட மறுத்தது. இதுதான் பத்திரிக்கைகள் கடைபிடிக்கும் ஜனநாயகமோ?
Labels:
SDPI,
இலங்கை கடற்படை,
மீனவர்
மக்கள் புரட்சி: எகிப்து
நான்கு நாள்களாக எகிப்து ஒரு மிகப்பெரிய மக்கள் புரட்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக இரும்புக் கரம் கொண்டு மக்களின் பேச்சுரிமையையும், சுதந்திரத்தையும் அடக்கி வைத்து ஒரு சர்வாதிகார ஆட்சிக்குத் தலைமை தாங்கி வந்த அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகவேண்டும் என்கிற கோரிக்கை வலுத்திருக்கிறது.
ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் தெருவில் இறங்கி எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் மட்டுமல்லாமல் அலெக்சாண்டீரியா உள்ளிட்ட எல்லா நகரங்களின் மையப் பகுதிகளையும் தங்கள் வசப்படுத்தி இருக்கிறார்கள். ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சியின் அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன. அரசு அலுவலகங்கள், அரசு தொலைக்காட்சி நிலையங்கள், ஏன், அரசுக்கு ஆதரவான பத்திரிகை அலுவலகங்கள் அனைத்துமே தாக்கப்படுகின்றன.ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீர்ப்புகை வீச்சிலும், தடியடிப் பிரயோகங்களிலும் காயமடைந்திருக்கிறார்கள். இணையதளம், செல்பேசி போன்றவை அரசால் முடக்கப்பட்ட நிலையிலும் போராட்டம் வலுத்து வருகிறதே தவிரக் குறைவதாகத் தெரியவில்லை.இதற்கு முன்பு இதுபோன்ற மக்கள் போராட்டம் ஒன்று 1977-ல் எகிப்தை ஸ்தம்பிக்க வைத்தது. அதற்கு "ரொட்டிக் கலவரம்' என்று பெயர் சூட்டப்பட்டது. உணவுப் பஞ்சம்தான் அந்தக் கலவரத்துக்குக் காரணம். அன்றைய அதிபர் அன்வர் சதத்தின் ஆட்சியைப் பலவீனப்படுத்தி, ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலிய அந்தக் கலவரத்தைப் போலவே, இந்த மக்கள் புரட்சியும் ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலக்கூடும்.விக்கிலீக்ஸ் வெளியிட்ட அதிர்ச்சி தரும் தகவல்களும், அல் ஜஸீரா தொலைக்காட்சி சேனலின் முனைப்புடன் கூடிய மக்கள் புரட்சிக்கு ஆதரவான செய்திகளும், எகிப்தில் ஏற்பட்டிருக்கும் கிளர்ச்சிக்கு வலு சேர்த்திருக்கின்றன என்பது தெளிவு.மக்கள் வெகுண்டெழுந்து தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கி இருக்கிறார்கள் என்றால் காரணம் இல்லாமல் இல்லை. கட்டுக்கடங்காத விலைவாசி; சராசரி எகிப்து குடிமகனின் கைக்கெட்டாத உணவுப் பொருள்களின் விலையும் தட்டுப்பாடும்; பரவலாகக் காணப்படும் லஞ்ச ஊழல்; அரசின் வேவுத் துறையினரின் அட்டகாசம்; வேலையில்லாத் திண்டாட்டம் என்று உலகின் வேறு பல நாடுகளிலும் காணப்படும் அதே நிலைமைதான் எகிப்திலும்!எட்டு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் கூடிய எகிப்துதான் வட ஆப்பிரிக்காவிலும் மேற்கு ஆசியாவிலும் பெரிய நாடு. போதாக் குறைக்கு, உலகின் கிழக்குப் பகுதியையும், மேற்குப் பகுதியையும் இணைக்கும் சூயஸ் கால்வாய் எகிப்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. எகிப்தில் புரட்சி, எகிப்தில் ஆட்சிக் குழப்பம் என்றால் அது நிச்சயமாக உலகம் முழுவதும் எதிரொலிக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது.இந்த முறை எகிப்தில் ஏற்பட்டிருக்கும் இந்தப் புரட்சியில் தனித்தன்மைகள் பல. எகிப்து நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் 25 வயதுக்கும் குறைவான இளைஞர்கள். அவர்கள்தான் இந்த மக்கள் கிளர்ச்சிக்கு வித்திட்டு, முன்னின்று நடத்தி வருகிறார்கள். எதிர்க்கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம், போராட்டம் வலுத்தபிறகு வந்து சேர்ந்து கொண்டிருக்கிறதே தவிர, இந்தக் கிளர்ச்சியில் அதற்கு முக்கியப் பங்கு கிடையாது.இளைஞர்கள் தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கியபோது, அதுவரை மெளனமாக எல்லா அநீதிகளையும் சகித்துக் கொண்டிருந்த சாதாரணப் பொதுமக்கள் அவர்களுடன் தங்களை இணைத்துக்கொண்டு விட்டார்கள். சாதாரணக் கிளர்ச்சி மக்கள் போராட்டமாக வெடித்து விட்டிருக்கிறது.இதில், அதிசயம் என்னவென்றால், இதுபோன்ற போராட்டங்கள் இஸ்லாமிய நாடுகளில் வெடிக்கும்போது, மதத் தீவிரவாதிகளின் கரம் ஓங்குவது வழக்கம். எகிப்தில் நேர்மாறாக "அல்லாஹ் அக்பர்' கோஷம் எழுப்பப்படவில்லை. "ஆட்சி மாற்றம் தேவை' என்கிற கோரிக்கைதான் எழுப்பப்படுகிறது. போராட்டத்தில் களமிறங்கி இருக்கும் எகிப்து மக்கள் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் தலையீடை விரும்பாதவர்கள். ஆனால், அமெரிக்காவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பவில்லை.எகிப்தில் ஏற்பட்டிருக்கும் மக்கள் புரட்சியில் இன்னொரு விசித்திரம்கூட அரங்கேறி இருக்கிறது. போராட்டத்தை அடக்க ராணுவத்துக்குக் கட்டளையிட்டால், நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் மக்கள் இயக்கத்தின் மீது அடக்குமுறையை ஏவிவிட நாங்கள் தயாராக இல்லை என்று ராணுவம் மறுக்கிறது. பேச்சுரிமையும், ஜனநாயகமும் கேட்டுப் போராடும் எந்தக் கிளர்ச்சிக்கும் இதுவரை எந்த நாட்டிலும் ராணுவம் ஆதரவு கொடுத்ததாக சரித்திரம் இல்லை. எகிப்தில் அந்த அதிசயம் அரங்கேறி இருக்கிறது.அதிபர் பராக் ஒபாமா கடந்த ஜூன் மாதம் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் பேசும்போது, கூறிய வார்த்தைகள் இவை - ""உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் மக்கள் சுதந்திரமாகத் தங்கள் கருத்தை வெளிப்படுத்தும் உரிமையையும் தாங்கள் யாரால், எப்படி ஆட்சி செய்யப்பட வேண்டும் என்கிற உரிமையையும் விரும்புகிறார்கள் என்பது எனது கருத்து!''.இப்படி அறிவித்த அமெரிக்க அதிபர், சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக, நல்லாட்சி கோரி, மக்களாட்சி கேட்டு நடைபெறும் எகிப்து இளைஞர்களின் புரட்சிக்கு ஆதரவு தெரிவிக்காதது ஏன்? அந்த இளைஞர்கள் தேசியக் கொடியைக் கைகளில் ஏந்தியபடி சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோருகிறார்களே அவர்களை அமெரிக்கா மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்தும் ஆதரிப்பதுதானே நியாயம்!சிறிது நாள்களுக்கு முன்னர் துனிசியாவில் மக்கள் எழுச்சி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது. இப்போது சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிராக எகிப்து, யேமன், ஜோர்டான் நாடுகளில் மக்கள் தெருவில் இறங்கிப் போராட முற்பட்டிருக்கிறார்கள். அரபு நாடுகளில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட இருப்பதை இந்தக் கிளர்ச்சிகள் கட்டியம் கூறுகின்றன. அரபு நாடுகளில் மட்டுமா? உலகம் முழுவதும் ஆட்சியாளர்கள் நல்லாட்சி தராமல் போனால் இதுதான் அரங்கேற இருக்கும் காட்சியாக இருக்கும்!

எகிப்து புரட்சி
Friday, March 11, 2011
இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல
எந்த கட்சிகளும் பாரபட்சமின்றி தன் பங்கிற்கு இந்தியாவில் செய்தாகி விட்டது ஊழல்களை,
அது அவ்வப்போது வரும் பின்பு நாம் மறந்துவிடுகிறோம்.
அந்த வகையில் இந்திய அரசு சுவிஸ் அரசிடம் கேட்கும் இந்தியர்களின் கருப்பு பணம் பற்றிய விடயம்தான் நான் எழுதுவது,
சுவிஸ் வங்கியில் உள்ள தொகை
இந்த தொகையை வைத்து கீழுள்ள மதிப்பீடு செய்யப்பட்ட ஒரு மின்னஞ்சல் வந்தது எனக்கு, அது அப்படியே தருகிறேன்
- 30 வருடத்திற்க்கு வரியில்லாத இந்திய பட்ஜெட் போட முடியுமாம்
- 60 கோடி வேலைவாய்பை ஏற்படுத்த முடியும் நமது நாட்டில்
- எந்த கிராமத்திலிருந்தும் புது டெல்லிக்கு நான்கு வழி சாலைகள் அமைக்க முடியும்
- 500 பொது நல திட்டங்கள் இலவசமாக தரமுடியும்
- 20 கோடி மாணவர்களுக்கு 50 வருடங்களுக்கு இலவச கல்வி தரமுடியும்
- ஒவ்வொரு இந்தியனும் 2000/-ரூபாய் மாதாமாதம் 60 வருடத்திற்கு பெறமுடியும்
- உலக வங்கியிடமும், IMF யிடமும் நாம் எதிர்பார்க்க வேண்டியதில்லை
மேலும் காமென்வெல்த் ஊழல்கள், ஆதர்ஷ் கட்டட ஊழல், 2G அலைகற்றை ஊழல், கர்நாடகா எடியூரப்பா ஊழல்கள்...மற்றும் பல பல.......... உள்ளன அவைகளை நாம் இங்கு சேர்க்க வில்லை.
இப்பொழுது சொல்லுங்கள் இந்தியா ஏழை நாடா?????
கீழுள்ள இணையதள தொடர்பும் நாம் எந்த அளவு சுரண்டப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்த்தும்.
நாம் சிந்தனையிழந்து விட்டோமா? அல்லது சிந்திக்க மறுக்கிறோமா? எதுவாயினும் இழப்பு நமக்குத்தான் என்பதை நாம் எப்போது புரிந்துகொள்ளப்போகிறோமோ அன்றே நமது விடியல். விடியலை தேடுவோரே, வாருங்கள் ஒன்றிணைவோம், கை கோர்ப்போம் வெற்றிபெறுவோம்.
Labels:
2G அலைகற்றை ஊழல்,
இந்தியா
Subscribe to:
Comments (Atom)