SDPI South Chennai President's message to all the Indians



The Social Democratic Party of India (SDPI) is a neo-political movement aiming at the renaissance of Indian politics to empower people of all social strata within the country. Let we all Indian citizens join hands in a common political platform to promote equality, freedom, justice and a harmonised living.

SDPI has come out with the slogan - "Freedom from hunger! Freedom from Fear"

I welcome all Indians - especially the Chennaites in promoting a harmonised polity to work for the welfare and development of India and the citizens. Our vision of "India - a Superpower in 2020" should be achieved with the advancement and empowerement of all Indians regardless of any caste, creed or religion.

- P. Mohamed Hussain
President, South Chennai District,
SDPI.

Tuesday, February 1, 2011

டி.என்.டி.ஜே.யின் அவதூறுகளும் கடைந்தெடுத்த முட்டாள்தனமும்! - SDPI பதிலடி

கடந்த 64 ஆண்டுகளாக அதிகாரவர்க்கத்தின் புறக்கணிப்பால், சங்பரிவார
ஃபாசிஸ்டுகளின் தாக்குதல்களால் கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு, பாதுகாப்பு இவற்றில் கடும் பின்னடைவை சந்தித்துள்ள முஸ்லிம் சமூகத்தின் விடுதலைக்கும் இதே போன்று ஒடுக்கப்பட்ட சமூகங்களின் விடுதலைக்கும் தீர்வாக வெற்றிடமாக உள்ள ஒன்றை நிரப்பும் வகையில் உருவாக்கப்பட்டதே எஸ்.டி.பி.ஐ.  என்கிற தேசிய அரசியல் கட்சி.

இது மத்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யபட்ட ஒரு பொதுவான அரசியல் கட்சியாகும். இதற்கென்று கொள்கைகளும் சட்டதிட்டங்களும் தனியாக உருவாக்கப்படுள்ளன.

இது எந்தச் சமூக அமைப்பின் துணை அமைப்போ அல்லது கிளை அமைப்போ அல்ல! கட்சியில் மாநில அளவிலும், தேசிய அளவிலும் நிர்வாகிகளாக உள்ளவர்கள் எந்த ஒரு குறிப்பிட்ட அமைப்பையும் சார்ந்தவர்கள் அல்ல. பல்வேறு அமைப்புகளிலும், அரசியல் கட்சிகளிலும் அங்கம் வகித்து செயல்பட்டவர்கள் பல்வேறு மதங்களையும் சார்ந்தவர்கள்.

இப்படி ஓர் அரசியல் பேரியக்கம் தேவை என்பதை உணர்ந்து, அதை உருவாக்க முயற்சி எடுத்தது, உதவி செய்தது என்பதை தவிர எஸ்.டி.பி.ஐ.யின் நிர்வாகத்திற்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கும் வேறு எந்தச் சம்பந்தமும் இல்லை. எந்த மதத்தையும், இயக்கத்தையும், கொள்கைகளையும் சார்ந்தவர்கள் எஸ்.டி.பி.ஐ.யில் உறுப்பினராக இணைய முடியும்; நிர்வாகிகளாகவும் வர முடியும்.

எஸ்.டி.பி.ஐ.யின் கொள்கைகளும் நோக்கங்களும் லட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் மூலமும், நூற்றுக் கணக்கணக்கான பொதுக் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலமும் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. கட்சியின் ''மேனிஃபெஸ்டோ'' என்ற செயல்திட்ட அறிக்கையும் பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.இவை எவற்றிலும் எஸ்.டி.பி.ஐ. இஸ்லாத்தின் கொள்கைகளையும். கடமைகளையும் சட்டதிட்டங்களையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசியல் கட்சி என்றோ
இதை மீறுபவர்கள் கட்சியில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றோ நாம்
குறிப்பிடவில்லை.

எஸ்.டி.பி.ஐ. முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கபட்ட சமூகங்களின் அரசியல் மற்றும் சமூக விடுதலைக்காக உருவாக்கப்பட்டுள்ள பொதுவான அரசியல் கட்சி. இதில் இஸ்லாமிய ஒழுக்கங்களைப் பேணி நடப்பவர்களும் இஸ்லாமிய நடைமுறைகள் மற்றும் மார்க்கத்தை அறியாத முஸ்லிம்களும், தலித்கள், கிறிஸ்தவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என லட்சக்கணக்கானோர் உறுப்பினர்களாகவும்
செயல்வீரர்களாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான கிளைகளும்
அமைக்கப்படுள்ளன. இது போன்றே மாவட்டம், தொகுதி மற்றும் நகர, கிளைக் கமிட்டி நிர்வாகிகளாக பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பொறுப்பேற்று செயல்படுகிறார்கள்.

சமூகச் சீர்கேடுகள், ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபடக்கூடாது என்பது
மட்டும்தான் கட்சியில் கேடர்களாக - செயல்வீரர்களாக சேர்வதற்கு நாம்
வைத்திருக்கும் நிபந்தனை. சாதாரண உறுப்பினராக யார் வேண்டுமானாலும் சேர முடியும். இது தான் எஸ்.டி.பி.ஐ.யின் அமைப்பு முறை. இப்படி பல்வேறு மதத்தவர்கள் சேர்ந்து செயல்பட கூடிய ஒரு கட்சி எப்படி ஒரு மதத்தின் ஒழுக்க நெறிகளையும் கடமைகளையும் அடிப்படையாக வைத்திருக்க முடியும், மற்றவர்கள் மீது திணிக்க முடியும். எஸ்.டி.பி.ஐ.யில் உள்ள யாருக்கும் தங்களுடைய மதத்தை, கலச்சாரத்தை, கொள்கைகளைப் பின்பற்றத் தடை இல்லை.

முஸ்லிம்களையும், ஒடுக்கப்பட்ட சமூக மக்களையும் ஒருங்கிணைத்து அவர்களை அரசியல் அதிகாரம் ஒரு சமுதாயமாக மாற்ற வேண்டும் என்ற இலட்சியக்கனவோடு எஸ்.டி.பி.ஐ. புறப்பட்ட உடனேயே இதன் வளர்ச்சியை தடுக்க உளவுத்துறையும் சங்பரிவார ஃபாசிஸ்டுகளும் கேரளாவில் எஸ்.டி.பி.ஐ,யின் வளர்ச்சி தங்கள் கட்சிக்கு ஆபத்து என உணர்ந்த மார்க்சிஸ்ட்டுகளும், இதுபோன்ற இன்னும் பல்வேறு அமைப்புகளின் தடைகளை உடைத்துத்தான் எஸ்.டி.பி.ஐ. தேசிய அளவில் முன்னேறி வருகிறது.

தமிழகத்தில் எஸ்.டி.பி.ஐ.யின் வளர்ச்சி தங்களுக்கு பெரும் ஆபத்து என்று உணர்ந்த டி.என்.டி.ஜே. என்ற அமைப்பினர் (இவர்களின் தகிடுதத்தங்களையும், ஊழல்களையும், ஒழுக்கக் கேடுகளையும், முரண்பாடுகளையும், அவதூறுப் பிரச்சாரங்களையும், கோஷ்டி மோதல்களையும் வெளிப்படுத்த அதற்கென்றே பல வார, மாத இதழ்களும், இணையதளங்களும் உள்ளன. அது நமக்கு அவசியமில்லை. நம் மீது சுமத்தியுள்ள உணர்வற்ற உணர்வு இதழின்
அவதூறுகளுக்காக மட்டுமே இதை எழுதுகிறோம்). கடந்த (2011 ஜனவரி 7,13, 1421) இரண்டு உணர்வு இதழ்களில் எஸ்.டி.பி.ஐ.யின் மீது அவதூறு செய்திகளையும் முட்டாள்தனமான குற்றச்சாட்டுகளையும் எழுதியதோடு தமிழகம் முழுவதும், வளைகுடா நாடுகளிலும் தொடர் அவதூறுப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

உணர்வின் உளறல்களை பி.ஜே. மத்ஹபைச் சார்ந்தவர்களைத் தவிர வேறு யாரும் பொருட்டாக மதிப்பதில்லை (டி.என்.டி.ஜே.வில் உள்ள பெரும்பாலானோர்களே நம்புவதில்லையாம்) என்றிருந்தாலும் உண்மையை தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

பொங்கல் வாழ்த்து பேனரும் - டி.என்.டி.ஜே.யின் அரைவேக்காட்டுத்தனமும்!

நாம் மேற்குறிப்பிட்டதைப் போன்று எஸ்.டி.பி.ஐ. அனைத்து மதத்தினரும் இணைந்து செயல்படும் தேசிய அரசியல் கட்சி என்ற அடிப்படையில், இதன் உறுப்பினர்கள் தங்கள் மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்து பேனர்கள் வைப்பதை எஸ்.டி.பி.ஐ. மாத்திரமல்ல, இது போன்ற எந்த அரசியல் கட்சிகளும் தடுக்க முடியாது.

இவ்வாறு வைக்கப்பட்ட சில பேனர்களின் புகைப்படங்களை தங்கள் உணர்வில் வெளியிட்டு தங்கள் அரிப்பை தீர்த்துள்ளனர் பி.ஜே. மத்ஹபைச் சார்ந்தவர்கள்.

மேற்படி பேனர்கள் எஸ்.டி.பி.ஐ.யில் உள்ள பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள்
தாங்கள் வைத்த பேனரில் தங்களது சக அல்லது மேல்மட்ட நிர்வாகிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு வைத்துள்ளனர். உண்மையை மறைத்து அவதூறு பரப்பும் கும்பல் அந்த பேனரில் முஸ்லிம் அல்லாதவர்கள் பெயர் உள்ளதையோ அல்லது அவர்கள் புகைப்படங்கள் உள்ளதையோ குறிப்பிடவில்லை.

ஒரு கட்சியை விமர்சிக்கும்போது அதன் கொள்கை என்ன? அவர்கள் தங்களை இஸ்லாமிய அரசியல் கட்சி என்று வாதிடுகின்றார்களா? என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கும் இந்த அறிவு சூனியங்களை, மார்க்க அறிஞர்களாக நினைப்பவர்களைப் பற்றித்தான் கவலைப்பட வேண்டும்.

*திருப்பூரில் நடந்ததென்ன?*

திருப்பூரில் ஜும்ஆ உரையில் எஸ்.டி.பி.ஐ. இஸ்லாத்தின் கொள்கைகளைப்
பின்பற்றுவதில்லை என அங்கு உரையாற்றியவர் பேசியுள்ளார். அதோடு பல்வேறு அவதூறுகளையும் வழமை போல அவிழ்த்து விட்டுள்ளார். அங்கிருந்த எஸ்.டி.பி.ஐ. மாவட்டத் தலைவர் அமானுல்லாஹ் தனது மறுப்பைத் தெரிவித்திருக்கிறார். அவர் எழுந்து தனக்கு பதில் சொல்ல வாய்ப்பு தரவேண்டும் எனக் கேட்க, ஜும்ஆ முடிந்ததும் உங்கள் விளக்கத்தை சொல்லுங்கள் எனக் கூறியுள்ளனர். ஆனால் ஜும்ஆ முடிந்த பின்பும் விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மீண்டும் கடுமையான
வற்புறுத்தலுக்குப் பின்பு தான் விளக்கம் அளிக்க அவருக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.

அதில் தங்களது சாதனையாகக் கருதும் டி.என்.டி.ஜே. கும்பல் முழக்கமிட்ட அவரது விளக்கமும், கருத்தும் அவர்கள் வெளியிட்ட வீடியோவையும் பார்த்தால் தெரியும். நாங்கள் தனிப்பட்ட முறையில் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுபவர்கள். ஆனால் எஸ்.டி.பி.ஐ. குர்ஆன் ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் அமைப்பல்ல. இது ஒரு பொதுவான அரசியல் கட்சி. (ஏனெனில் இது அனைத்து மதத்தினரும் இணைந்து செயல்படும் பொதுவான அரசியல் கட்சி). இதுதான் அவர் அளித்த விளக்கம். இந்த விளக்கத்தை ஆய்வு செய்யாமல், அதற்குப் பின் தொடர்ந்தும் வாய்ப்பளிக்காததோடு தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக முழக்கமிட்ட இந்த கொள்(ளை)கை தங்கங்கள்,
அமானுல்லாஹ்வும் அவருடன் வந்தவர்களும் பள்ளிவாசலில் புகுந்து தகராறு
செய்ததாகவும், அடிக்க முனைந்ததாவும் அமானுல்லாஹ் உட்பட 5 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள்.

கேள்வி கேட்டதற்கு பதில் அளிக்காமல் காவல் நிலையத்தில் புகார் அளித்த
அயோக்கியர்களை என்னவென்று சொல்வது?

விபச்சாரிக்கு வக்காலத்து! காவல்துறைக்கு பல்லக்கு!
டி.என்.டி.ஜே.யின் சுயரூபம் பாரீர்!


கடந்த ஜனவரி 21 உணர்(ச்சி)வு இதழில் விபச்சாரிகளுக்கு ஆதரவாக வெளிவந்த ஒரு வக்கிர புத்தியையும், ஆபாச எண்ணங்களையும் (அனுபவம் அப்படித்தான் யோசிக்கத் தோன்றும்) தெளிவுபடுத்தியது. உண்மையில் நடந்த நிகழ்வு யாதெனில்:

மதுரை மஹ்பூப் மற்றும் பாளையம் பகுதியில் புல்லட் ராணி என்ற பெண் குணசுந்தரி என்ற பெண்ணை வைத்து விபச்சாரம் செய்து வந்தார். இதனை அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் பரக்கத், அல்ஹாஜ், பாதுஷா மற்றும் பாஷா ஆகியோர் (அவர்கள் டி.என்.டி.ஜே. அமைப்பில் இல்லாத காரணத்தால்) இதைக் கண்டித்து வந்துள்ளனர்.

கடந்த 12.01.2011 அன்று மேற்படி பெண்கள் பொது இடத்தில் நின்று பிறரைக்
கவர்ந்தவர்களாக நின்று கொண்டு அநாகரீகமாக நடந்துள்ளதோடு, பர்தா அணிந்து முஸ்லிம் இளைஞர்களைக் கவரும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

நாம் குறிப்பிட்ட அந்த இளைஞர்கள் மேற்படி இரு பெண்களையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சிக்கும்போது புல்லட் ராணி தப்பி விட்டார். குணசுந்தரியை மட்டும் பிடித்து ஆட்டோவில் ஏற்றி சி 3 காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அங்கு விபச்சாரி மீது அவர்கள் கொடுத்த புகாரை வாங்க மறுத்த காவல்துறை (மாமூலோடுதானே விபச்சார விடுதிகள் நடைபெறுகின்றன), புல்லட் ராணியிடமிருந்து ஒரு புகாரைப் பெற்று பெண்ணைக் கடத்தியதாக நான்கு பேரின் மீதும் புகாரைப் பதிவு செய்து கைது செய்தது காவல்துறை.

நடந்த சம்பவத்தைத் திரித்து, காவல் துறையின் அராஜகத்திற்குப் பாராட்டுப்
பத்திரம் வழங்கி, விபச்சாரிக்கு 'இளம் பெண்' என அடைமொழி கொடுத்து, ஆட்டோவில் வரும்போது என்னவெல்லாம் நடந்திருக்கும் என்று தனது ஆபாசக் கற்பனையை அலைய விட்டு தன்னுடைய 'தவ்ஹீதை' வெளிச்சமாக்கியிருக்கிறது மான உணர்வற்ற உணர்வு வார இதழ்
(அவதூறை வாரி இறைக்கும் இதழ்).

இதில் பாஷா என்பவர் எந்தக் கட்சியையும் சேராதவர். பரக்கத், அல்ஹாஜ், பாபு என்ற பாதுஷா ஆகிய மூவரும் த.மு.மு.க.வில் இருந்து விலகி எஸ்.டி.பி.ஐ.யில் சில மாதங்களுக்கு முன் இணைந்தவர்கள். பரக்கத் கிளை துணைச் செயலாளராகவும் அல்ஹாஜ் பொருளாளராகவும் பொறுப்பு வகித்தனர். சம்பவம் நடைபெற்ற இரு மாதங்களுக்கு முன்பு கட்சியின் ஒழுங்குகளை மீறியதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில்
இருந்து மூவரும் நீக்கப்பட்டு பரக்கத்துக்கு பதில் பிலால் என்பவர் துணைச்
செயலாளராகவும் அல்ஹாஜுக்கு பதில் ரஃபீக் ராஜா என்பவர் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றார்கள்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக எஸ்.டி.பி.ஐ.யின் எந்தவொரு நிர்வாகியும் காவல்நிலையம் செல்லவில்லை.

எஸ்.டி.பி.ஐ.யின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதாக (உணர்வைத் தவிர) எந்தவொரு பத்திரிகையோ, அல்லது காவல்துறையோ யாரும் குறிப்பிடவில்லை. இந்த உண்மைகள் தெரிந்தும் எஸ்.டி.பி.ஐ. மீது அவதூறு பரப்பும் நோக்கத்தோடும், காவல்துறைக்கு கைமாறு செய்யும் நோக்கத்தோடும் விபச்சாரிகளுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கும் வகையிலும் செயல்பட்டு, பக்கம் பக்கமாக அவதூறு பரப்பிய உணர்வின் செயலும் டி.என்.டி.ஜே.யின் நடவடிக்கைகளும் கேவலமானது என்றால் மிகையல்ல!

உணர்வின் இந்த ஆபாசக் கட்டுரை வந்த உடனேயே அப்பகுதி மக்கள் டி.என்.டி.ஜே. வக்கிர புத்தியைக் கண்டித்து சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

சங்பரிவார ஃபாசிஸ்டுகளின் ஊதுகுழலா?
அல்லது உளவுத்துறையின் கைப்பாவையா?


திருவிடைச்சேரியில் கடந்த ரமலானில் ஜமாஅத் தலைவரை பள்ளிவாசலில் புகுந்து படுகொலை செய்த பயங்கரம் நடந்த பிறகு, தமிழகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஒன்று சேர்ந்து நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அவர்கள் நேரடியாக திருவிடைச்சேரி சென்று விசாரித்து அவர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் ''கொலைக் குற்றவாளிகளான டி.என்.டி.ஜே.வினரைக் கைது செய்!'' என அனைத்து அமைப்புகளின் பெயருடன் தமிழகம் முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டது.

இக்கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ.க்கு அழைப்பும் இல்லை. நாம் கலந்து கொள்ளவும்
இல்லை. எஸ்.டி.பி.ஐ. பெயர் சுவரொட்டியில் இடம் பெறவுமில்லை. ஆனால் அந்தச் சுவரொட்டிக்குப் பதிலாக டி.என்.டி.ஜே. ஒட்டிய சுவரொட்டியில், ''தீவிரவாத அமைப்புகளான பாப்புலர் ஃப்ரண்ட், எஸ்.டி.பி.ஐ.யைத் தடை செய்! முன்னாள் சிமி தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்களான பாக்கர், ஜாவாஹிருல்லாஹ்வை கைது செய்!'' என்றும் குறிப்பிட்டு சங்பரிவாரின் கைக்கூலிகள் தாங்கள் என்பதை நிருபித்தனர்.

நெல்லை ஏர்வாடியில் - டி.என்.டி.ஜே.யின் வம்பும், இமாலயப் புரட்டும்!

மேற்படி சுவரொட்டியை ஏர்வாடியில் அன்றைய தினம் ஒட்டபட்ட எஸ்.டி.பி.ஐ.யின் சுவரொட்டி மீது நள்ளிரவில் ஒட்டினர். எஸ்.டி.பி.ஐ.யின் செயல்வீரர்கள் வேறு இடத்தில் ஒட்டுமாறு சொன்ன போது அங்குதான் ஒட்டுவேன் எனச் சொல்லி கைகலப்பில் ஈடுபட்டு மறுநாள் காலையில் டி.என்.டி.ஜே. பள்ளிவாசலில் பணி புரியும் அம்ஜத் என்பவரை மருத்தவமனையில் அனுமதித்து விட்டு பள்ளிவாசலில் புகுந்து
எஸ்.டி.பி.ஐ.யின் நிர்வாகிகள் இமாமைத் தாக்கியதாக புகார் கொடுத்தனர் இந்த
சினிமா நடிகர்களை மிஞ்சும் மார்க்க நடிகர்கள்.

அத்தோடு விட்டார்களா? தங்களது மீடியாக்கள் மூலம் இமாம் தாக்கப்பட்டதாக நீலிக்கண்ணீர் வடித்தனர்.

தென்காசியில் டி.என்.டி.ஜே.யின் அத்துமீறலும் ஆகாசப் புளுகும்!

தென்காசி நகரில் டி.என்.டி.ஜே. எழுதிய சுவர் விளம்பரத்தை அழித்ததாக தங்களது இணையதளத்தில் நாடகமாடியுள்ளனர். ஆனால் நடந்த உண்மை நிகழ்வு இதோ:

கடந்த ஜனவரி 9ல் தென்காசியில் நடைபெற்ற டி.என்.டி.ஜே.யின் கருத்தரங்கத்திற்காக மஹ்மூது மிஸ்பாஹி ஆலிம் அவர்களின் வீட்டுச் சுவரில் அவரின் அனுமதி பெறாமலேயே விளம்பரம் செய்திருந்தனர். அதை அழித்துவிட்டு எஸ்.டி.பி.ஐ.யின் சென்னை மண்டல மாநாட்டு விளம்பரம் எழுத உரிமையாளர் அனுமதி தந்திருந்தும் மேற்படி நிகழ்ச்சி முடியும் வரை காத்திருந்து விட்டு டி.என்.டி.ஜே. நிகழ்ச்சி முடிந்த மறுநாள் அச்சுவரில் வெள்ளை சுண்ணாம்பு அடித்து SDPI BOOKED எனக் குறிப்பிட்டு அனுமதி
பெற்ற சுவர் என்பதையும் எழுதி விட்டு வந்துள்ளனர் எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள்.

ஆனால் மறுநாள் அந்த இடத்தில் வீட்டு உரிமையாளரிடமோ அல்லது அனுமதி பெற்ற எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகளிடமோ தெரிவிக்காமல் தங்களது ஜனவரி 27 நிகழ்ச்சிக்கான விளம்பரத்தை அச்சுவரில் எழுதிச் சென்றுள்ளனர். வம்பு செய்யும் நோக்கோடு செயல்பட்டதால் மறுநாள் எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள் அதை அழித்து விட்டு தங்களது விளம்பரத்தை எழுதினர் டி.என்.டி.ஜே.யின் வன்முறைக் கும்பலோ பல இடங்களில் எழுதியிருந்த எஸ்.டி.பி.ஐ.யின் விளம்பரங்களை அழித்து தங்கள் ஆணவ புத்தியை வெளிப்படுத்தினர்.

இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததில் 9 டி.என்.டி.ஜே.வினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் மறைத்து பாபரி விளம்பரத்தை அழித்து விட்டார்கள் எனப் புளுகுவதற்கு என்ன பெயர்? இதற்கு பெயர்தான் அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு என்பதோ?

இறுதியாக டி.என்.டி.ஜே. அமைப்பினருக்கு நாம் சொல்லிக் கொள்வது எஸ்.டி.பி.ஐ. எல்லா மதத்தினரும் இணைந்து பணியாற்றும் பொதுவான அரசியல் கட்சி. மத ரீதியான பிரச்சாரங்களிலோ அல்லது விமர்சனங்களிலோ எஸ்.டி.பி.ஐ. ஈடுபடாது. இது போன்ற தேவையற்ற வாதங்களிலோ விமர்சனங்களிலோ ஈடுபடக்கூடாது என்ற அடிப்படையிலேயே செயல்பட்டு வருகிறோம். அவதூறுப் பிரச்சாரத்திற்கு பதிலாகவே இதை எழுதுகிறோம். எங்கள் நோக்கத்தையும் பயணத்தையும் திசைதிருப்பாதீர்கள்.

எஸ்.டி.பி.ஐ. தடைகள் உடைத்து பாய்ந்து வரும் பெரும் வெள்ளம். இதைத் தடுக்க நினைப்பவர்கள் காணாமற் போவார்கள். இது போன்ற அவதூறுச்
செய்திகளுக்கு விளக்கம் தருவது மாத்திரமல்ல, சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் எஸ்.டி.பி.ஐ. மேற்கொள்ளும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
*எஸ்.டி.பி.ஐ. (Social Democratic Party Of India)*
*தமிழ்நாடு.*

No comments:

Post a Comment