நமது நாட்டையும், நாட்டின் பொருளாதாரத்தையும் சுரண்டி, மக்களை விரக்திக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும் ஊழலை எதிர்த்து, Social Democratic Party of India (SDPI) நாடு தழுவிய ஊழல் எதிர்ப்பு போராட்டங்களை நடத்திற்று. மக்களுக்கெதிரான அனைத்து தீமைகளையும் எதிர்த்து களமிறங்கிப் போராடுவதில் SDPI ஒருபோதும் சளைத்து நிற்காது எனக்காட்டுவதாக இந்த போராட்டங்கள் அமைந்தன.
தென்சென்னை மாவட்டம் சைதாப்பேட்டையிலுள்ள பனகல் மாளிகை முன்பு 27 நவம்பர் 2010 அன்று இந்த ஊழல் எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. தென்சென்னை மாவட்டம் சைதை தொகுதி சகோதரர் S.அப்துல் மஜீத் தலைமை தாங்கினார். சகோதரர்கள் மனோஜ், சுமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சகோதரர்கள் மீரான் M.Sc., ஜுனைத் M.S(IT), ஜுனைத் அன்சாரி BE., ஆகியோர் முறையே வரவேற்புரையும், கண்டன உரையும் ஆற்றினர். சகோதரர் அக்பர் நன்றியுரை ஆற்றினார்.
பெருந்திரளான மக்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். மக்களின் மத்தியில் இப்போராட்டத்திற்கு சிறந்த ஆதரவு இருந்தது குறிப்பிடதக்கது. இந்திய மக்களின் நலம் விரும்பிகளான பல அரசியல் இயக்கங்களும் இத்தகைய போராட்டத்திற்கு தங்களது ஆதரவைத்தெரிவித்துக் கொண்டன.

No comments:
Post a Comment