இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கொல்வது ஒருபுறமிருக்க, இந்திய அரசோ நம் மீனவர்களை பசியில் ஆழ்த்துகிறது. ஆம்! கடல் அட்டை மீன் பிடிப்பதன் மீது மத்திய அரசு தடை விதித்திருக்கிறது, சுற்றுப்புறச் சூழல் அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில். இதனால் பல ஆயிரக்கணக்கான மீனவர்கள் வீடுகளோ வயிற்றுக்கு உணவு ஈய முடியாமல் தவிக்கிறது.
இத்தடையை அரசாங்கம் உடனே நீக்கக்கோரி 07.01.2011 அன்று காலை 11:00 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்ட மீன்பிடித்தொழிலாளர் யூனியன், இராமநாதபுரம் மாவட்ட சங்கு, பாசி தொழிலாளர் கூட்டமைப்பு மற்றும் கடலோர செயல்பாட்டு கூட்டமைப்பு ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ஹுசைன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மீனவர்களுக்கு எதிரான இந்த தடையை உடனே நீக்கக்கோரியும், மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகுக்க வேண்டுமென்றும் கூறினார். அவர் மேலும் பேசுகையில் , இவ்வாறு, தண்ணீரில் வாழும் மீனவன் கண்ணீரில் வாழ்வதை SDPI ஒருபோதும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது, மீனவர்களின் அனைத்து நியாயமான கோரிக்கைகளுக்காக நடைபெறும் போராட்டத்தில் எந்நேரமும் தோளோடு தோள் நிற்கும் என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் வடசென்னை மாவட்ட தலைவர் அமீர் ஹம்சா, பொதுச்செயலாளர் முஹம்மது ரஷீத், துறைமுகப் பகுதி தலைவர் அமீர் சுல்தான் மற்றும் ஏராளமான தொண்டர்களும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment