தென்சென்னை மாவட்டம் எம்.ஜி.ஆர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள முஸ்லிம்கள் கடந்த 19 வருடங்களாக அடக்கஸ்தலம் வேண்டி, தமிழக அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், மனு மீது மனு கொடுத்தும் அரசாங்கம் இன்னும் செவிமடுத்த பாடில்லை. இந்த கோரிக்கையை வலுப்படுத்தவும், அரசின் கவனத்தை ஈர்க்கவும் வேண்டி கடந்த 22ஜனவரி 2011 அன்று எம்.ஜி.ஆர் நகர் மார்க்கட் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்ற்து. இதில் அனைத்து முஸ்லிம் இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் பங்குகொண்டன.
இதில் உரையாற்றிய எஸ்.டி.பி.ஐ யின் தென்சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ஹுசைன் பேசுகையில், ஒவ்வொரு பேச்சிலும் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள், தமிழன், தமிழன் என்று கூறுகிறார், ஆனால் த்மிழகத்திலோ தமிழன் வாழுமிடமும், வாழுமிடமும் மட்டுமல்ல மரணித்து போகுமிடமும் கேள்விக்குறியாகவே உள்ளது என்று பேசினார். மேலும், தமிழக அரசே! இருக்கும்போது வாழ்வதர்க்கு வீடு கேட்கவில்லை, இறந்த பிறகு அடக்கம் செய்ய இடம் கொடுத்தால் போதும் என்றார்.
மக்களுக்கு தங்களது அரசியல் நிலைமையை புரிய வைக்கக்கூடியதாக இந்த பொதுக்கூட்டம் அமைந்தது.
No comments:
Post a Comment