இம்பால்: இந்திய ஆயுதப்படைக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்திற்கு (AFSPA) எதிராக ஐரோம் ஷர்மிளாவின் 10 வருட உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக ஸ்ரீநகரில் இருந்து இம்பால் வரை ஒரு நாடு தழுவிய பிரச்சாரத்தை பல தொண்டு நிறுவனங்கள் இணைந்து வருகின்ற செப்டம்பர் மாதம் நடத்த உள்ளனர். இந்த பிரச்சாரத்தின் முலம் ஐரோமின் போராட்டத்திர்க்கு புதிய உத்வேகம் கிடைக்கும் என்று எதிர்பக்கபடுகிறது.
நவம்பர் 2, 2000, அன்று மணிப்பூர் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு நகரில்ஒரு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பத்து பொதுமக்கள் தக்க காரணங்களின்றி இந்திய அஸ்ஸாம் ரைஃபிள் இராணுவ படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவதை தொடர்ந்து ஐரோம் ஷர்மிளாஆயுதப்படைக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை திரும்ப பெறக்கோரி கடந்த 10 வருடமாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இம்பால் கிழக்கில் உள்ள ஷர்மிளாவின் விட்டிற்கு அருகில் இருக்கும் ஜவஹர்லால் நேரு மருத்துவமனையில் அரசாங்கம் ஷர்மிளாவை காவலில் வைத்துள்ளது.
NAPM, ஆஷா பரிவார், காந்தி உலகளாவிய குடும்பம், ஜக்ரிடி மஹிலா சமிதி, குடாய் கித்மட்கர், யுவா கோஷிஷ், மிஷன் பாரதியம், சட்பாவ் மிஷன் மற்றும் ACSS (சமூக ஆய்வுகளுக்கான ஆசிய மையம்) போன்ற தேசிய இயக்கங்களின் கூட்டமைப்புகள் இணைந்து "ஷர்மிளாவை காப்பாற்ற பிரசாரம்" (Save Sharmila Campaign)என்ற ஒரு தேசிய பிரசாரம் நடத்துகின்றனர்.
அனைத்து அரசியல் கட்சிகளும் அவரது உடல்நிலை மற்றும் உண்மையான கோரிக்கைகளை தெரிந்து கொள்ள தங்கள் பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும. தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பெண்களுக்கான தேசிய கமிஷன் ஷர்மிலவை காப்பாற்ற முயற்சி எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் இந்த பரிசாரம் நடை பெறுகிறது.
இந்த கோரிக்கைகள் நிறைவற கோரி பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களிடம் கடிதங்கள் முலம் வலியுறுத்தி உள்ளனர்.
ஜூன் 25 அன்று புது தில்லியில் உள்ள ராஜ்காட்டில் ஒரு மெழுகுவர்த்தி பிரார்த்தனை அமர்வு நடைபெற்றது. JNU, JMI, டியு, ஹம்தார்த், ஏ.ஐ.ஐ. மற்றும் ஐஐடி போன்ற சிவில் அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள் சமூக வலைப்பின்னல் இணைய தளங்கள் மூலம் இந்த பிரச்சாரத்திற்கு ஆதரவு அளித்தனர் .
அக்டோபர் 2ஆம் தேதி நாடு முழுவதும் இந்த பிரச்சாரத்திற்கு அதரவாக ஒரு கையெழுத்து இயக்கம் நடைபெற உள்ளது.அதை தொடர்து வருகின்ற செடம்பர் மாததில் இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீநகரில் இருந்து இம்பால் வரை ஒரு பிரசார யாத்திரை நடைபெற உள்ளது.

No comments:
Post a Comment