SDPI South Chennai President's message to all the Indians



The Social Democratic Party of India (SDPI) is a neo-political movement aiming at the renaissance of Indian politics to empower people of all social strata within the country. Let we all Indian citizens join hands in a common political platform to promote equality, freedom, justice and a harmonised living.

SDPI has come out with the slogan - "Freedom from hunger! Freedom from Fear"

I welcome all Indians - especially the Chennaites in promoting a harmonised polity to work for the welfare and development of India and the citizens. Our vision of "India - a Superpower in 2020" should be achieved with the advancement and empowerement of all Indians regardless of any caste, creed or religion.

- P. Mohamed Hussain
President, South Chennai District,
SDPI.

Sunday, July 17, 2011

SDPI தென்சென்னை மாவட்ட செயல்வீரர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி முகாம்!

SDPI யின் தென்சென்னை மாவட்ட செயல்வீரர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி முகாம் தென்சென்னை மாவட்டம், மயிலாப்பூர் தொகுதியிலுள்ள பட்டினம்பாக்கம் மீனவர் சமூக நலக்கூடத்தில் 17 ஜூலை 2011, காலை 10 மணிமுதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இப்பயிற்ச்சி முகாமிற்கு தென்சென்னை மாவட்டத்திற்குட்பட்ட திருவல்லிக்கேணி, எழும்பூர், அண்ணாநகர், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், ஆயிரம் விளக்கு மற்றும் வேளச்சேரி ஆகிய தொகுதிகளிலிருந்து ஏராளமான தொகுதி, வட்டம் மற்றும் கிளை நிர்வாகிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.



முகாமில் கலந்துகொண்ட SDPI நிர்வாகிகளின் ஒரு பகுதி
கலந்துகொண்ட நிர்வாகிகளுக்கு பயிற்றுவிக்க, SDPI யின் தமிழ் மாநில பொது செயலாளர் திரு. ரஃபீக் அஹ்மது அவர்களும், SDPI யின் மாநில செயலாளர் திரு. G. அப்துல் சத்தார் அவர்களும், SDPI யின் தஞ்சை மாவட்ட தலைவர் மற்றும் SDPI யின் மாநில செயற்குழு உறுப்பினர் திரு. முபாரக் அவர்களும் வருகை தந்தனர்.

பயிற்சி முகாம் காலை 10 மணியளவில் துவங்கியது. வரவேற்புரையை தென்சென்னை மாவட்ட செயலாளர் திரு. முஹம்மது சாலிஹ் அவர்கள் நிகழ்த்தினார். பின்னர் SDPI யின் தொண்டர்களுக்கு பிற கொள்கையிழந்த கட்சிகளின் கொள்கைகளைப் பற்றியும், கொள்கையொன்று இருப்பதாக பீற்றிக்கொண்டு, அக்கொள்கையை தனது சுயந‌லத்திற்காக பயன்படுத்திய அக்கட்சியின் தலைவர்களை (?) பற்றியும், அவர்கள் மக்களை நட்டாற்றில் விட்ட நிலை குறித்தும் உரையாற்றினார். பின்னர் இந்திய அரசியலில் மாற்றம் காண விழையும் SDPI யின் கொள்கை குறித்த விளக்கத்தையும், SDPI யின் செயல்வீரர்களிடத்து இருக்க வேண்டிய தலைமைத்துவ பண்புகள் குறித்தும் விளக்கமளித்தார்.

SDPI யின் தமிழ் மாநில பொது செயலாளர் திரு. ரஃபீக் அஹ்மது அவர்கள் நிர்வாகிகளுக்கு மத்தியில் உரையாற்றிய பொழுது
பின்னர் SDPI யின் தொண்டர்களுக்கு கூட்ட மேலாண்மை குறித்த தகவல்களை SDPI யின் தஞ்சை மாவட்ட தலைவர் விளக்கினார். தொடர்ந்து மதிய உணவிற்காண இடைவெளிக்குப்பின் கட்சியின் வளர்ச்சி குறித்த குழு கலந்தாய்வு நடைபெற்றது. பின்னர் SDPI யின் தமிழ் மாநில பொது செயலாளர் திரு. ரஃபீக் அஹ்மது அவர்கள் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும், உலகளாவிய எகாதியபத்தியத்தின் நிழல் தற்போது நமது நாட்டின் மீது படிந்து, நம் தேசத்தை மீண்டும் ஓர் அடிமைத்தனத்தை நோக்கி இட்டுச்செல்வதை கோடிட்டுக்காட்டினார். மேலும் 60 வருட‌ங்களுக்கும் மேலாக நமது நாட்டையும், நாட்டு மக்களையும் ஆட்சி செய்வதாக கூறிக்கொண்டு நாட்டு மக்களுக்கு இழைத்த நம்பிக்கை துரோகத்தையும் சுட்டிக்காட்டினார்.

இறுதியாக SDPI யின் தென்சென்னை மாவட்ட தொண்டர்களுக்கு கொள்கை அர்ப்பணிப்பு குறித்து SDPI யின் தஞ்சை மாவட்ட தலைவர் உரையாற்றினார். முகாமின் இறுதியாக SDPI யின் தென்சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ஹுசைன் நன்றியுரையாற்றியதைத் தொடர்ந்து முகாம் இனிதே நிறைவுபெற்றது.

Tuesday, July 12, 2011

இம்பால்: இந்திய ஆயுதப்படைக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்திற்கு (AFSPA) எதிராக ஐரோம்  ஷர்மிளாவின்  10 வருட உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக ஸ்ரீநகரில் இருந்து  இம்பால் வரை ஒரு நாடு தழுவிய பிரச்சாரத்தை  பல தொண்டு  நிறுவனங்கள் இணைந்து வருகின்ற செப்டம்பர் மாதம் நடத்த உள்ளனர். இந்த பிரச்சாரத்தின் முலம் ஐரோமின் போராட்டத்திர்க்கு புதிய உத்வேகம் கிடைக்கும் என்று எதிர்பக்கபடுகிறது.

நவம்பர் 2, 2000, அன்று மணிப்பூர் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு நகரில்ஒரு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பத்து பொதுமக்கள் தக்க காரணங்களின்றி இந்திய அஸ்ஸாம் ரைஃபிள் இராணுவ படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவதை தொடர்ந்து ஐரோம் ஷர்மிளாஆயுதப்படைக்கான‌ சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை திரும்ப பெறக்கோரி கடந்த 10 வருடமாக உண்ணாவிரத‌ம் இருந்து வருகிறார்.

இம்பால் கிழக்கில் உள்ள ஷர்மிளாவின்  விட்டிற்கு அருகில் இருக்கும்  ஜவஹ‌ர்லால் நேரு மருத்துவமனையில் அரசாங்கம் ஷர்மிளாவை காவலில் வைத்துள்ளது.

NAPM, ஆஷா பரிவார், காந்தி உலகளாவிய குடும்பம், ஜக்ரிடி  மஹிலா சமிதி, குடாய் கித்மட்கர், யுவா கோஷிஷ், மிஷன் பாரதியம், சட்பாவ் மிஷன் மற்றும் ACSS (சமூக ஆய்வுகளுக்கான ஆசிய மையம்) போன்ற  தேசிய இயக்கங்களின் கூட்டமைப்புகள் இணைந்து "ஷர்மிளாவை காப்பாற்ற பிரசாரம்" (Save Sharmila Campaign)என்ற ஒரு தேசிய பிரசாரம் நடத்துகின்றனர்.



அனைத்து அரசியல் கட்சிகளும் அவரது உடல்நிலை மற்றும் உண்மையான கோரிக்கைகளை தெரிந்து கொள்ள தங்கள் பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும. தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பெண்களுக்கான தேசிய கமிஷன் ஷர்மிலவை காப்பாற்ற முயற்சி எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் இந்த பரிசாரம் நடை பெறுகிறது.

இந்த கோரிக்கைகள் நிறைவற கோரி பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களிடம் கடிதங்கள் முலம் வலியுறுத்தி உள்ளனர்.

ஜூன் 25 அன்று புது தில்லியில் உள்ள ராஜ்காட்டில் ஒரு மெழுகுவர்த்தி பிரார்த்தனை அமர்வு நடைபெற்றது. JNU, ​​JMI, டியு, ஹம்தார்த், ஏ.ஐ.ஐ. மற்றும் ஐஐடி போன்ற சிவில் அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள் சமூக வலைப்பின்னல் இணைய தளங்கள் மூலம் இந்த பிரச்சாரத்திற்கு ஆதரவு அளித்தனர் .

அக்டோபர்  2ஆம் தேதி நாடு முழுவதும் இந்த பிரச்சாரத்திற்கு அதரவாக ஒரு கையெழுத்து இயக்கம் நடைபெற உள்ளது.அதை தொடர்து வருகின்ற செடம்ப‌ர் மாததில் இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீநகரில் இருந்து இம்பால் வரை ஒரு பிரசார யாத்திரை நடைபெற உள்ளது.

Thursday, July 7, 2011

லோக் பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்களை நிறைவேற்றக்கோரி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்

சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் SDPI -  தென் சென்னை மாவட்டம்  சார்பாக  லோக் பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்களை தமிழகத்தில் விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் 07-ஜூலை-2011 அன்று மாலை 4 .30  மணிக்கு சைதாபேட்டை பனகல் மாளிகை அருகே நடைபெற்றது. சைதாபேட்டை  தொகுதி தலைவர் முஹம்மது அனீஸ் அவர்கள்  தலைமை தாங்கினார்








தென் சென்னை மாவட்ட தலைவர் P .  முஹம்மது ஹுசைன் அவர்கள் கவன ஈர்ப்பு  உரையாற்றினார். கவன ஈர்ப்பு உரையின்போது லோக் பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்களால் மக்களுக்கு ஏற்ப்படும் நன்மை குறித்தும், ஊழல் எதிர்ப்பு இயந்திரங்களில் பொதுமக்களின் பங்களிப்பு குறித்தும் எடுத்துரைத்தார்.




சைதாபேட்டை  தொகுதி செயலாளர் அப்துல் மஜீத் அவர்கள்  நன்றியுரையற்றினார். இந்த ஆர்பாட்டாத்தில்  பெரும் திரளான பொது மக்களும் SDPI  யின் நிர்வாகிகளும் செயல்வீரர்களும் கலந்து கொண்டனர்.