மக்களின் நலனை முன்வைத்து அர்சியலில் மாற்றத்தைக் காண விழையும் மாபெரும் தேசிய கட்சியான SDPI யின் 3வது வருட துவக்கத்தை முன்னிட்டு தென்சென்னை சேப்பாக்கம் தொகுதியில் மரம் நடு விழா நடைபெற்றது. நிகழ்சசியில் SDPI யின் தமிழக தலைவர் திரு.KKSM. தெஹ்லான், மாநில செயலாளர் திரு.அபூபக்கர் சித்தீக், தென்சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ஹுசைன், வடசென்னை மாவட்ட தலைவர் அமீர் ஹம்ஸா, தென்சென்னை மற்றும் வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
தென்சென்னை மாவட்டம் எழும்பூர் தொகுதி தலைவர் திரு.அஹ்மது அலி அவர்கள் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து SDPI யின் தமிழக தலைவர் திரு.KKSM. தெஹ்லான், மாநில செயலாளர் திரு.அபூபக்கர் சித்தீக் மற்றும் தென்சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ஹுசைன் ஆகியோர் உரையாற்றினர்.
SDPI யின் தமிழக தலைவர் திரு.KKSM. தெஹ்லான் அவர்கள் உரையாற்றியபொழுது, SDPI யின் 3வது வருட துவக்கத்தை முன்னிட்டு 1 இலட்சம் மரக்கன்றுகள் நட வேண்டுமென்ற உன்னத இலட்சியத்தின் நோக்கத்தை எடுத்துரைத்தார். இதே போல் நாட்டுக்கும், நாட்டு மக்களின் நலனுக்கும் பயன் தரும் அனைத்து திட்டங்களையும் SDPI முன்னின்று செயல்படுத்துமென்று கூறினார்.
No comments:
Post a Comment