மாபெரும் தேசிய கட்சியான SDPI யின் மூன்றாம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தென்சென்னை மாவட்டம், அண்ணாநகர் தொகுதியிலுள்ள MMDA காலனி, பால்பூத் அருகே 25 ஜூன் 2011 அன்று மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற்றது. மாலை 6 மணி சுமாருக்கு கட்சியின் கொள்கைப்பாடல்கள் மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது நிகழ்ச்சி. SDPI யின் மாநில பொதுச்செயலாளர் B.அப்துல் ஹமீது அவர்கள் கொடியெற்றி வைத்தார். கொடியேற்றத்தின் போது SDPI யின் தென்சென்னை மாவட்ட தலைவர் P.முஹம்மது ஹுசைன், தென்சென்னை மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் அஹமது பாஷா, தென்சென்னை மாவட்ட பொது செயலாளர் A.புஹாரி, தென்சென்னை மாவட்ட செயலாளர் S.முஹம்மது சாலிஹ், அண்ணாநகர் தொகுதி தலைவர் P.முஹம்மது ஜுனைத் மற்றும் தொகுதி நிர்வாகிகள், சிறப்பு விருந்தினர்கள் திரு.அண்டன் கோமஸ், தலைவர், அகில இந்திய மீனவர் சங்கம், வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, நிறுவனர், அன்பாலயம் முதியோர் இல்லம் மற்றும் பெருந்திரளான தொண்டர்களும், பொது மக்களும் கலந்துகொண்டனர்.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து 7 மணியளவில் பொதுக்கூட்டம் தொடங்கியது. பொதுக்கூட்டத்திற்கு SDPI யின் தென்சென்னை மாவட்ட அண்ணாநகர் தொகுதி தலைவர் முஹம்மது ஜுனைத் தலைமை வகித்தார். மயிலை தொகுதி தலைவர் மயிலை S.மீரான், எழும்பூர் தொகுதி தலைவர் A.M.அஹ்மது அலி, திருவல்லிக்கேணி தொகுதி செயலாளர் சாகுல் ஹமீது, சைதை தொகுதி தலைவர் அனீஸ், ஆயிரம்விளக்கு தொகுதி தலைவர் ஜுனைத் அன்சாரி, தி.நகர் தொகுதி தலைவர் இப்ராகிம், வடசென்னை மாவட்டம் ஆர்.கே.நகர் தொகுதி செயலாளர் திரு.இரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்சென்னை மாவட்ட பொது செயலாளர் புஹாரி அவர்கள் தொகுப்புரை வழங்க,அண்ணாநகர் தொகுதி துணைத்தலைவர் அப்துல் ஹமீது வரவேற்புரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து அண்ணாநகர் தொகுதி தலைவர் முஹம்மது ஜுனைத் தலைமையுரை ஆற்றினார்.

தொடர்ந்து வடசென்னை மாவட்டம் ஆர்.கே.நகர் தொகுதி செயலாளர் திரு.இரத்தினம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கர்மவீரர் காமராஜர் அவர்களின் பெயராலும், தமிழர்களின் அரசியல் வழிகாட்டியான காயிதே மில்லத்தின் பெயராலும் கல்வி விருதுகளை வழங்குவதற்க்கு SDPI க்கு மட்டுமே தகுதியுள்ளது என்றும், மற்றவர்கள் SDPI யின் அரசியல் வழிமுறையினயே பின்தொடர வேண்டுமென்றும் என்று கூறினார். மேலும் பேசுகையில் மக்களின் திராவிட முன்னேற்ற கழகத்திற்க்கு எதிரான எண்ணமே நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அண்ணாதிராவிட முன்னேற்ற கழகத்தை ஆட்சியில் அமர்த்தியுள்ளது. மாறாக அண்ணாதிராவிட முன்னேற்ற கழகம் மக்களின் நலம்நாடி என்ற அடிப்படையிலில்லை. மேலும் ஜெயலலிதா ஒன்றும் ஊழலுக்கு அப்பாற்பட்டவரில்லை, மக்கள் திராவிட முன்னேற்ற கழகத்திற்க்கு கொடுத்த படிபினையை தானும் புரிந்துகொண்டு மக்களுக்கு நன்மை செய்வதில் முனையவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மக்களின் துயர் நீங்காவிடத்து SDPI அதற்க்காக எவரையும் எதிர்த்து களமிறங்கி போராடும் என்றார்.
 |
| வடசென்னை மாவட்டம் ஆர்.கே.நகர் தொகுதி செயலாளர் திரு.இரத்தினம் அவர்கள் வாழ்த்துரை வழங்கியபொழுது |
பின்னர் வாழ்த்துரை வழங்கிய அகில இந்திய மீனவர் சங்கத்தலைவர் திரு.அண்டன் கோமஸ், திராவிட முன்னேற்ற கழகம் மேற்கொண்ட மக்களுக்கு பயணற்ற திட்டங்களையும், அவற்றால் மக்கள் துன்பங்களையும் சுட்டிக்காட்டி, மக்களின் இத்தகைய துயரங்களை நீக்கவும், கொள்கையற்ற கட்சிகளின் பிடியிலிருந்து மக்களை காக்கவுமே கொள்கை பிடிப்புள்ள, இந்தியர்களின் வாழ்வில் மாற்றத்தை விரும்பும் மாபெரும் தேசிய கட்சியான SDPI களமிறங்கியுள்ளது என்று கூறினார். மீனவர்களின் வாழ்விலுள்ள துயரங்களை நீக்கவும், மீனவர்களின் உரிமை காக்கவும் SDPI முன்வரவேண்டுமென்றும் எடுத்தியம்பினார்.
 |
| அகில இந்திய மீனவர் சங்கத்தலைவர் திரு.அண்டன் கோமஸ் அவர்கள் வாழ்த்துரை வழங்கியபொழுது |
சிறப்பு விருந்தினரான அன்பாலயம் முதியோர் இல்ல நிறுவனர், வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தன்னுடைய கன்னி வாழ்த்துரையை வழங்கியபொழுது, புதிய ஆத்திச்சூடியிலிருந்து இலக்கிய வரிகளை எடுத்துரைத்து, தேசியக்கட்சியான SDPI தன்னுடைய கொள்கையில் சிறந்து விளங்கி, மக்களை தூய்மையான அரசியலின் பக்கம் வழிநடத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
 |
| அன்பாலயம் முதியோர் இல்ல நிறுவனர், வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தன்னுடைய கன்னி வாழ்த்துரையை வழங்கியபொழுது |
தொடர்ந்து SDPI யின் மாநில பொதுச்செயலாளருக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும் பொன்னாடை அணிவிக்கும் நிகழ்ச்சியும், மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. SDPI யின் மாநில பொதுச்செயலாளர் B.அப்துல் ஹமீது அவர்களுக்கு தென்சென்னை மாவட்ட தலைவர் P. முஹம்மது ஹுசைன் அவர்கள் பொன்னாடை போர்த்தினார். சிறப்பு விருந்தினர்களான திரு.அண்டன் கோமஸ் மற்றும் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு முறையே தென்சென்னை மாவட்ட செயலாளர் முஹம்மது சாலிஹ் அவர்களும், அண்ணாநகர் தொகுதி தலைவர் முஹம்மது ஜுனைத் அவர்களும் பொன்னாடை போர்த்தினர். வடசென்னை மாவட்ட தலைவர் அமீர் ஹம்ஜா அவர்களுக்கு தென்சென்னை மாவட்ட பொருளாளர் அஹ்மது ரிஃபாய் அவர்களும், திரு.இரத்தினம் அவர்களுக்கு அண்ணாநகர் தொகுதி பொருளாளர் நூருல்லாஹ் அவர்களும் பொன்னாடை போர்த்தினர்.
மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளான சேப்பாக்கம் தொகுதி முதியவர் திரு.காளீஸ்வரன், தட்டாங்குளம், சூளை பகுதி முதியவர் திரு.மணி ஆகியோருக்கு மூன்று சக்கர கைவண்டியும், எழும்பூர் தொகுதி முதியவர் திரு. பழனிச்சாமி அவர்களுக்கு இருப்பு தேய்ப்பு பெட்டியும் வழங்கப்பட்டது.
 |
| அன்பாலயம் முதியோர் இல்ல நிறுவனர், வழக்கறிஞர் V.S.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முதியவர் திரு.காளீஸ்வரன் அவர்களுக்காக சேப்பாக்கம் தொகுதி செயலாளர் திரு.சாகுல் அவர்களிடத்தில் மூன்று சக்கர கைவண்டியை வ்ழங்கியபொழுது |
 |
| அகில இந்திய மீனவர் சங்கத் தலைவர் திரு.அண்டன் கோமஸ் அவர்கள் மாற்றுத் திறனாளியான முதியவர் திரு.மணி அவர்களுக்கு மூன்று சக்கர கைவண்டி அளித்தபோது |
மேலும் எழும்பூர் தொகுதியைச் சேர்ந்த சிறுநீரகக் கோளாறினால் அவதிப்பட்ட ஃபர்ஹான் என்ற 5 மாத குழந்தைக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 24,000 வழங்கப்பட்டது. இதனை அக்குழந்தையின் சார்பாக அக்குழந்தையின் உறவினர் பெற்றுக்கொண்டார்.
இதனையடுத்து MMDA, அரும்பாக்கம் அரசு மேனிலைப்பள்ளியின் 2010-2011 வருட தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் முதல் மூன்று நிலைகளை எட்டிய மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கண் திறந்த காமராஜர் - தமிழர்களின் அரசியல் நாயகர் காயிதே மில்லத் அவர்களின் பெயரால், SDPI யின் சார்பாக பரிசும், அவர்கள் மேன்மேலும் வாழ்வில் சாதனை படைக்க பாராட்டுப்பத்திரமும், ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கான பரிசுகளை SDPI யின் மாநில பொது செயலாளர் திரு. அப்துல் ஹமீது அவர்களும், தென்சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ஹுசைன், வடசென்னை மாவட்ட தலைவர் அமீர் ஹம்ஜா, தென்சென்னை மாவட்ட செயலாள்ர் முஹம்மது சாலிஹ் ஆகியோர் வழங்கினர்.
இதனைத்தொடர்ந்து SDPI யின் மாநில பொது செயலாளர் திரு. அப்துல் ஹமீது அவர்கள் உரையாற்றிய பொழுது, நமது தேசத்தில் மக்கள் படக்கூடிய அவலங்களையும், அவர்களின் நலனுக்காக இதுவரை நமது நாட்டை ஆட்சி செய்த அரசுகள் எதுவும் செய்யவில்லை மாறாக தேவைக்கேற்ப மக்களை ஏமாற்றி வந்துள்ளனர் என்றும், மக்களின் இத்தகைய இழிநிலைகளைப் போக்கிடவும், வாழ்வில் மலர்ச்சி ஏற்ப்படவும் பாடுபடவே SDPI என்ற மாபெரும் தேசிய கட்சி அர்சியலில் களமிறங்கியுள்ளது என்று குறிப்பிட்டார். மேலும் பேசுகையில், இப்படிப்பட்ட நிலைகளிலிருந்து நாட்டை பாதுகாத்திடவும், இந்தியாவை வல்லரசாக்கிட உழைக்கும் SDPI யில் மக்களனைவரும் இணையுமாறும் கேட்டுக்கொண்டார்.
 |
| SDPI யின் மாநில பொது செயலாளர் திரு. அப்துல் ஹமீது அவர்கள் உரையாற்றிய பொழுது |
பின்னர் சிறப்புரையாற்ற வந்த SDPI யின் தென்சென்னை மாவட்ட தலைவர் திரு. முஹம்மது ஹுசைன், இதுவரை தமிழகத்தை ஆட்சிபுரிந்த திராவிட(?) கட்சிகள் தமிழன்! தமிழன்!! என்று கூறி தமிழர்களை வஞ்சித்த கொடுமையையும், இனிமேல் மக்கள் இவர்களைக்கண்டு ஏமாறமாட்டார்கள் என்றும் கூறினார். இப்பொழுது ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் அ.தி.மு.க ஒன்றும் ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சியல்ல, மக்கள் தி.மு.க வின் ஆட்சி மீது கொண்ட அதிருப்தியே அ.தி.மு.க வை ஆட்சியிலமர்தியுள்ளது, மாறாக அ.தி.மு.க ஒரு சிறந்த கட்சி என்ற அடிப்படையிலில்லை என்ற்ம் குறிப்பிட்டார். ஆட்சிக்கட்டிலில் அமர்வது என்பது ஒரு முட்டைக்குள் இருக்கும் கரு ஜனிப்பது போன்றதாகும். அது ஜனிப்பதும், மரணிப்பதும் முட்டையின் ஓடு உடைந்தபின்பே தெரியும். அதுபோல தற்போது ஆட்சிக்கு வந்துள்ள அ.தி.மு.க வின் உண்மை நிலை சில காலங்களுக்கு பிறகே தெரியவரும் என்று குறிப்பிட்டார்.

மேலும் பேசுகையில், அரசாங்கமும், அரசாங்க அதிகாரிகளும் நடந்து கொள்ளும் விதத்தையும், தனக்கு மிகப்பெரிய பின்புலம் இருப்பதாக பீற்றிக்கொள்ளும் நபர்களுக்கு உதவியாக இருந்துகொண்டு, சாமானிய மக்களுக்கு எதிராக நடந்து கொள்வது குறித்தும் சாடினார். நமது நாட்டின் அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராக நடக்கும் அரசியல்வாதிகளுக்கும், ரவுடிகளுக்கும் அரசு அதிகாரிகள் வளைந்து கொடுக்காமல் நீதியையும், நியாயத்தையும் நிலைநாட்டிட வேண்டும், அப்படி நீதியை நிலைநாட்டிட ஏதாவது தடங்கள் ஏற்படுமாயின் அவர்களுக்கு உதவ SDPI எப்போதும் காத்துக்கொண்டிருக்கும் என்றார். மாறாக நமது நாட்டிற்கோ, நாட்டு மக்களுக்கோ எதிராக செயல்படின், எவரையும் எதிர்த்து SDPI களமிறங்கும், போராடும், போராடி உயிரையும் கொடுக்க தயங்காது என்று முழக்கமிட்டார்.
 |
| தென்சென்னை மாவட்ட தலைவர் திரு. முஹம்மது ஹுசைன் அவர்கள் முழக்கமிட்டபொழுது |
நிகழ்ச்சியின் இறுதியாக தென்னை மாவட்டம், அண்ணாநகர் தொகுதியின் செயலாளர் திரு. அபூபக்கர் அவர்கள் நன்றியுரை நிகழ்த்த, நிகழ்ச்சி இனிமையாக முடிவடைந்தது.