நடந்து முடிந்த தமிழகம் & புதுவை சட்டமன்றத் தேர்தல்களில் SDPI
சமூக நலனை மட்டுமே முன்னிறுத்தி தனித்துப் போட்டியிட்டது தாங்கள் அனைவரும் அறிந்ததே.கட்சி துவங்கப்பட்டு ஒன்றரை வருடங்களே ஆன நிலையில் இந்தத் தேர்தலைச் சந்தித்த SDPI, கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது, இந்தியர்கள் - குறிப்பாக தமிழக மக்கள் SDPI யின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பறைசாற்றுவதாக அமைந்தது.
அதுவும் தி.மு.க.வுக்கெதிரான கடுமையான எதிர்ப்பலையிலும் SDPI க்கு இந்த வாக்குகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்று SDPI சிறிதும் துவண்டுவிடவில்லை. மாறாக, SDPI க்குக் கிடைத்த கணிசமான வாக்குகள் இன்னும் அதிகம் சமுதாயத்திற்காக உழைத்திட வேண்டும் என்ற எண்ணத்தையே ஏற்படுத்தி, உற்சாகமூட்டி சிறந்த ஊக்கத்தையும், ஆக்கத்தையும் தந்துள்ளது.
மக்களின் பேராதரவால் பாளையங்கோட்டை, கடையநல்லூர், பூம்புகார் ஆகிய தொகுதிகளில் SDPI மூன்றவாது இடத்தைக் கைப்பற்றியுள்ளது.
தொண்டாமுத்தூர், திருப்பூர்-தெற்கு, துறைமுகம் ஆகிய தொகுதிகளில் SDPI நான்காவது இடத்தைக் கைப்பற்றியுள்ளது.
SDPI க்காக வாக்களித்த வாக்காளர் பெருமக்களுக்கும், அதன் வெற்றிக்காக இறைவனிடம் பிரார்த்தித்தவர்களுக்கும், அயராது உழைத்த கர்ம வீரர்களுக்கும், அனைத்து வகையிலும் SDPI க்கு ஆதரவளித்து, உதவிகள் பல புரிந்த நல்லுள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.எதிர் வரும் காலங்களிலும் SDPI க்கு தங்களது உதவிகளையும், ஒத்துழைப்பையும், ஆதரவையும் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.
மீண்டும் நன்றிகள் பல.